Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2008
மதச்சார்பும் மனித உரிமை மீறலும்


அண்டை மாநிலமான கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி, அண்மையில் அரசின் பாடத்திட்டத்தில், ஏழாம் வகுப்பின் சமூக அறிவியல் பாடத்தில் ‘மதமில்லாத ஜீவன்' என்ற புதியதொரு பாடப்பகுதியை அறிமுகப்படுத்தியது. கலப்புமணம் செய்துகொண்ட பெற்றோர்; தாயின் பெயர் லட்சுமிதேவி; தந்தையின் பெயர் அன்ந்வர் ரஷீத்; மகனது பெயர் ‘ஜீவன்'. அவனுக்கு பள்ளிப்பருவம் வந்ததும் பெற்றோர் அவனைப் பள்ளியில் சேர்த்துவிட எண்ணி அழைத்து வருகின்றனர்.

பள்ளித் தலைமையாசியர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் வேளையில் ‘ஜீவனின் மதமாக எதைக் குறிப்பிடுவது' என்று கேட்கிறார். அதற்குப் பெற்றோர் ‘எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் இல்லை' என்று எழுதுமாறு கேட்டுக் கொள்கின்றனர். தலைமை ஆசிரியர் மீண்டும் கேட்கிறார் “சாதி என்று எதைக் குறிப்பிடுவது?'' ஜீவனின் பெற்றோன் பதில் “எந்தச் சாதியையும் சார்ந்தவர்கள் அல்ல''

ஒரு நிமிடம் கழித்து ஆசிரியர் பொறுமையுடன் கேட்கிறார். “பிற்காலத்தின் இவன் வளர்ந்து பெரியவனாகும்போது ஏதேனும் சமயம் சார்ந்தவனாக இருப்பது அவசியம் என்கிற தேவையை உணரும்போது அவன் நிலை என்னவாக இருக்கும்?'' இவர்களும் சாந்தமுடன் பதிலளிக்கின்றனர். “அதனை உணர நேரும் தருணத்தில் அவன் எந்த மதத்தைத் தேர்வு செய்ய விரும்புகிறானோ அதனையே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.''
மேற்கூறிய இந்தப் பாடப்பகுதி தற்போது கேரள அரசியலில் மிகப்பெய சர்ச்சையினை உருவாக்கி இருக்கிறது. இஸ்லாமிய, கிறித்தவ மத அமைப்புகளோடு கேரளாவின் நாயர் வகுப்பினரும் இப்பாடத்தை முழுவதுமாக நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர்.

எதிர்க்கட்சிகளும் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலைக் கவனத்தில் கொண்டு இதனை அரசியலாக்கி, ஓர் ஆயுதமாகக் கையிலெடுத்துக் கொண்டன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையை இரண்டு அரசியல் கட்சிகளின் முரண்பாடாக மட்டுமே நோக்க முடியுமா? அப்படித்தான் இந்த சர்ச்சை பார்க்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தப் பிரச்சினை மற்ற மாநிலங்களில் சிறிதும் பேசப்படாமல் மறைக்கப்பட்டிருக்கிறது. சமய சார்பற்ற அமைப்புகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் இப்பிரச்சினையில் தங்களது கருத்துக்களைப் பகிரங்கப்படுத்தி, வெகு மக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை.

அந்தப் பாடப்பகுதியில் தென்படும் உரையாடல் சமய நம்பிக்கைக்கு எதிராகப் பேசப்படவில்லை. எந்த மதத்தையும் பழித்துக் கூறவில்லை. எம்மதத்தையும் கேள்விக்குட்படுத்தவும் இல்லை. மத சுதந்திரம் உள்ள ஒரு நாட்டில், மதத்தை தெரிவு செய்து கொள்ளும் உரிமையை ஒரு மனிதனுக்கு அளிப்பதென்பதும் மனித உரிமையின் பாற்பட்டதே. அவன் ஆத்திகனாகவோ, நாத்திகனாகவோ வாழ்வதென்பதும் மத சுதந்திரத்தின் வரையறைக்குட்பட்டதே.

தகவலுக்கு உதவி : ‘மனித உமைக் கங்காணி'


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com